சுனாமி: தமிழகத்தில் 350 பேர் மாயம்
சென்னை & காஞ்சிபுரம்:
![]() |
தமிழகத்தில் சுனாமி தாக்குதலையடுத்து காணாமல் போன 350 பேரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை.
மாநிலத்தில் சுனாமிக்கு 12,000 பேர் வரை பலியான நிலையில், ஆயிரக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டன.நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் சுனாமி தாக்கி ஒரு வாரம் வரை கரையொதுங்கின. அதன் பின்னர் உடல்கள்கரையொதுங்குவது நின்றுவிட்டது.
இந் நிலையில் சுனாமி பாதித்த 13 மாவட்டங்களின் காவல் நிலையங்களிலும் 350 பேரைக் காணவில்லை என்று புகார்கள்கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் இறந்துவிட்டார்களா அல்லது உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
இதில் குமரி மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 117 பேரைக் காணவில்லை என்று புகார் தரப்பட்டுள்ளது. இதற்குஅடுத்தபடியாக சென்னையில் 63 பேரைக் காணவில்லை. இவர்களில் பலர் மீனவர்கள், மற்றவர்கள் காலையில் கடற்கரையில்ஜாகிங் சென்றவர்கள்.
கடலூரில் 51 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 22 பேரும், தஞ்சை மாவட்டத்தில் 37 பேரையும் காணவில்லை.
மேலும் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்ற கோவையைச் சேர்ந்த 28 பேரையும் காணவில்லை என்று புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
26 நாட்களாக இவர்கள் குறித்து எந்த விவரமும் இல்லாததால், இவர்கள் இறந்துபோய் ஒட்டுமொத்தமாய் புதைக்கப்பட்டஉடல்களில் இவர்களது உடல்களும் இருந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மொத்தத்தில் 350 பேர் காணாமல் போய்விட்டதாக புகார்கள் வந்துள்ளன.
காணாமல் போனவர்கள் விஷயத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி போய்ச் சேருவதிலும் பெரும் சிக்கல்ஏற்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் 7 வருடமாக திரும்பி வராவிட்டால் தான் அவர் இறந்ததாகக் கருதப்படுவார். இந்த விதிகாரணமாக காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு சுனாமி நிவாரண நிதி கிடைப்பதில் பிரச்சனை உருவாகியுள்ளது.
இந்த நிதி கிடைக்க இறப்பை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். சுனாமி விஷயத்தில் இந்த விதியைத் தளர்த்த வேண்டும் என்றுகோரிக்கை விடப்பட்டுள்ளது.
அரசுக்கு இந்தக் கோரிக்கையின் வலி புரியுமா?
![]() |
நாகையில் அம்மை பரவல்:
இதற்கிடையே நாகப்பட்டிணத்தில் சுனாமி பாதித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளகுழந்தைகள் சிலருக்கு அம்மை நோய் பரவத் தொடங்கியுள்ளது.
மீண்டும் கடலுக்கு...
இதற்கிடையே சுனாமி தாக்குதலையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கடந்த மாதம் 26ம் சுனாமி தாக்குதலையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.இந் நிலையில் கல்பாக்கம் அருகேயுள்ள உய்யாழிக்குப்பம் உள்ளிட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 5 படகுகளில்மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்களை ஊக்குவிக்க கைத்தறித் துறை அமைச்சர் சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன், உயர்அதிகாரிகள் ஆகியோரும் உடன் சென்றனர்.
அவர்கள் பிடித்து வந்த மீன்களை, அரசின் பிரதிநிதியாக வந்த மைத்ரேயன் ரூ.1,100 கொடுத்து வாங்கிக் கொண்டார்.
பின்னர் சுனாமி தாக்குதலில் காயமடைந்த நெமிலிக்குப்பத்தைச் சேர்ந்த 7 மீனவர்களுக்கு அமைச்சர் சோமசுந்தரம் தலா ரூ.5,000வழங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications