ஜெ. கொடுத்த கிரீடம்: தேவஸ்தானம் புது முடிவு
குருவாயூர்:
முதல்வர் ஜெயலலிதா கொடுத்த தங்க கிரீடத்தை வருமான வரி அதிகாரிகளின் ஆய்வுக்கு விடுவது தொடர்பாக கேரள மாநில அரசின்கருத்தை கேட்டுள்ளது குருவாயூர் தேவஸ்தானம்.
குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த தங்கக் கிரீடத்தை பரிசோதிக்க வேண்டும் என்று சென்னை வருமானவரித்துறை அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் சோதனை நடத்த குருவாயூர் தேவஸ்தானஇடைக்கால நிர்வாகக் குழு அனுமதி அளித்தது.
ஆனால் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் பக்தர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டவற்றைசோதனை செய்தால் அது கோயில் பாரம்பரியத்தைக் கெடுத்து விடும் என்று அவர்கள் குரல் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து வருமான வரி ஆய்வுக்கு திடீரென அனுமதி மறுத்து விட்டது தேவஸ்தானம். இந் நிலையில், இந்தப் பிரச்சினைதொடர்பாக கேரள மாநில அரசின் கருத்தை அறிய தேவஸ்தானத்தின் இடைக்கால நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
தேவஸ்தானத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தேவஸ்தான ஆணையர் மோகன்தாஸ்கூறுகையில், அரசின் கருத்தை அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு வருமான வரித்துறை அதிகாரிகளை அனுமதிப்பதா,வேண்டாமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றார் அவர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications