சுனாமி: கல்பாக்கத்தில் ராகுல் காந்தி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் சுனாமியால் தாக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனும், மக்களவைஉறுப்பினருமான ராகுல் காந்தி 2வது நாளாக இன்றும் பார்வையிட்டார்.
ராகுல்காந்தி நேற்று பாண்டிச்சேரி வந்தார். அங்கு சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட பின்பு நேற்றிரவு அரவிந்த் கண்மருத்துவமனையில் தங்கினார்.
இன்று காலை 9.30 மணிக்கு பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, கனக செட்டிக்குளம் ஆகிய கடலோர கிராமங்களுக்குசென்று சுனாமி பாதிப்புகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். பின்னர் கல்பாக்கம் புறப்பட்டார்.
அங்கு சுனாமி அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புதுப்பட்டினம் கடலோர கிராமத்துக்கு
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனுடன் ராகுல் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்பு உய்யாளிகுப்பம் கிராமத்துக்கு ராகுல் காந்தி சென்றார். அந்தக் கிராமத்துக்க வாகனத்தில் செல்ல முடியாது என்பதால் ராகுல்காந்தி நடந்தே சென்றார். அந்தக் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடியிருப்பில் தங்கியிருந்த மக்களுக்குடன் மண்தரையில் ராகுல் காந்தி உட்கார்ந்தார்.
அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் காரில் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டார். அப்போதுநிருபர்களிடம், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தேன். அவற்றை நான் மத்திய அரசிடம் தெரிவிப்பேன்.பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
விமான நிலையத்தில் மதிய உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி, பின்னர் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
-
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications