வீரப்பனுக்கு விஷம் தரப்படவில்லை: ஆய்வு
தர்மபுரி:
வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் விஷம் வைத்து கொல்லப்படவில்லை என்று ரசாயன பரிசோதனை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மலைக்கிராமத்தில்வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். வீரப்பன் கும்பலுடன் நடந்த மோதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிரடிப்படை கூறியது.
ஆனால், வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் மயக்க மருந்து கொடுத்து பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டும், பின்னர் விஷம்கொடுத்துக் கொல்லப்பட்டதாக உண்மை கண்டறியும் குழுவினரும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் கூறுகின்றனர்.
இந் நிலையில் வீரப்பன் விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை என்று ரசாயன பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.வீரப்பன் உயிருடன் இருக்கும்போதே அவனது உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவனும்,கூட்டாளிகளும் இறந்துள்ளதாக தடயவியல் பிரிவின் ரசாயனப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
வீரப்பன் மற்றும் கூட்டாளிகளின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட குண்டுகள், குடல் பகுதி ஆகியவற்றில் நடந்த ரசாயனப் பசோதனையில்இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications