ஜெயேந்திரருக்காக 108 கோயில்களில் யாகம்
கலவை:
வழக்குகளில் இருந்து ஜெயேந்திரர் விடுபட நாடு முழுவதும் 108 கோயில்களில் யாகம் நடத்தப்படும் என்று விசாகப்பட்டினம்பாலநாகம்மை மடாதிபதி வீர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
கலவையில் ஜெயேந்திரரை வீர சரஸ்வதி சுவாமிகள் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு தவறும் இழைக்காத ஜெயேந்திரர் மீது தமிழக அரசு பல பொய் வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இதன் மூலம் சங்கரமடத்தையும், இந்து மதத்தையும் அழிக்க நினைக்கிறது. இதை இந்து மக்கள் ஏற்க மாட்டார்கள்.
சங்கர மடம் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதை அழிப்பதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா எதை சாதிக்கப் போகிறார்என்பது தெரியவில்லை. அவரின் இந்துப் போக்கு கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதாவுக்கு மனமாற்றம் ஏற்படும் வகையில்ஆண்டவன் அவருக்கு நல்ல அறிவை வழங்க வேண்டும்.
ஜெயேந்திரர் நலமுடன் இருக்கவும், அவர் மீதான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்படவும் பாலநாகம்மை கோயில் மடம் சார்பாகநாடு முழுவதும் உள்ள 108 கோயில்களில் யாகம் நடத்தப்படும். இந்த யாகத்தில் ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும்ஜெயேந்திரரின் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications