கோவா: கவிழ்கிறது பாஜக அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கோவாவில் 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து பாஜக அரசு சட்டசபையில் பெரும்பான்மையை இழந்தது. இங்குகுடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டசபையில் 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பாஜக முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆட்சிநடத்தி வந்தார். இவர்களில் 3 பேர் கடந்த காலத்தில் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து18 எல்.எல்.ஏக்களுடன் மனோகர் ஆட்சி நடத்தி வந்தார். இந் நிலையில் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இசிதோர் பெர்னாண்டஸ், சுதனாசியோ மான் செரத்தே, மிக்கி பச்சேகோ ஆகிய மூவரும் திடீரென தங்களது பதவியைராஜினாமா செய்ததோடு, அரசுக்கு அளித்து வரும் ஆதரவையும் விலக்கிக் கொண்டனர்.

இதனால் மனோகரின் அரசு பெரும்பான்மையை இழந்தது. தற்போது சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறுமனோகருக்கு ஆளுநர் எஸ்.சி. ஜமீர் உத்தரவிட்டுள்ளார்.

4 அல்லது 5 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று மனோகரும் தெரிவித்துள்ளார். கோவா காங்கிரஸ் வசம் 15எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆனால் கோவாவில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் மேலிடம் ஆர்வம் காட்டவில்லை.

சட்டசபையில் மனோகர் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுமுடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+