ப.சியின் அறிவிப்பு மாநில உரிமை மீறிய செயல்: ஜெ.
சென்னை:
ராஜீவ் காந்தி சுனாமி நிவாரண கடனுதவி என்ற புதிய திட்டத்தின் வாயிலாக வங்கிகள் மூலம் மீனவர்களுக்கு நேரடியாக கடன்வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்திருப்பது மாநில அரசின் உரிமைகளை மீறிய செயல் என்றுமுதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ப.சிதம்பரம் தன்னிச்சையாக பத்திரிக்கைகளில் இத் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.இது மாநில அரசுகளை முழுமையாக புறக்கணிக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய நடவடிக்கை ஆகும்.
மன்மோகன் சிங் இதில் உடனடியாகத் தலையிட்டு மாநில அரசுகள் உரிமையுடன் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குஅதிகாரம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக பிரதமருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளேன்.
இத் திட்டத்திற்கு ராஜீவ் காந்தி சுனாமி நிவாரண கடனுதவி திட்டம் என்ற பெயர் வைத்திருப்பது மக்களைத் தேவையில்லாமல்அரசியல் ரீதியாக பிளவுபடுத்தும். முன்னெப்போதும் நடந்திராத ஒரு இயற்கைப் பேரழிவில் அரசியல் ஆதாயம் தேடமுயற்சிப்பது வருந்தத்தக்க முயற்சியாகும்.
கடந்த மாதம் 26ம் தேதி சுனாமி அலைகள் தாக்கியபோது தமிழக அரசின் நிவாரணப் பணிகள் பல்வேறு தரப்பினரின்பாராட்டுதலைப் பெற்றது. அனைத்துக்கட்சியினரும், பொதுமக்களும் தங்களுக்கு இடையே இருந்த வேறுபாடுகளை மறந்துதோளோடு தோள் நின்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் ப.சிதம்பரத்தின் அறிவிப்பு மக்களிடையே தேவையற்ற பிரிவினையை ஏற்படுத்துவதாக உள்ளது. இத்தகையநடவடிக்கைகளை தடுத்து நிறுத்தப்படாவிட்டால் நிவாரணப் பணிகள் முழுவதும் செயலற்றுப் போய்விடும்.
வங்கிகள் மூலமாகவே மீனவர்களுக்கு கடனுதவியும் மானிய தொகையும் வழங்கப்படும் என்று சிதம்பரம் கூறியிருப்பது, மாநிலஅரசுகள் நம்பத்தகுந்தவை இல்லை என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இத்தகைய அறிவற்ற, நடைமுறைக்கு ஒத்துவராத அறிக்கையை நிதியமைச்சர் எப்படி வெளியிட்டார் என்பது குறித்து நான்ஆச்சரியமடைகிறேன்.
நிரந்தர நிவாரணப் பணிகள் பல்வேறு பரிமாணங்களில் நடத்தப்பட வேண்டியிருந்தது. இதற்காக விரிவான ஆய்வை மாநிலஅரசு மேற்கொண்டது. இது நிவாரணப் பணிகளில் மாநில அரசு முழுமையாக ஈடுபட்டதை சுட்டிக்காட்டுகிறது.
அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களையும் பொறுப்புகளையும் அளித்துள்ளது. ஆனால் மாநில அரசுகள்இருப்பதையே மறந்து விட்டு, தலைமைச் செயலாளர், நிவாரணப் பணி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சிதம்பரம்நேரடியாக உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications