நேபாள அரசு திடீர் டிஸ்மிஸ்: மன்னர் அதிரடி!
காத்மாண்டு:
பிரதமர் ஷேர் பகதூர் துபா தலைமையிலான நேபாள நாட்டு அரசை அந் நாட்டு மன்னர் ஞானேந்திரா திடீரென இன்று கலைத்துவிட்டார்.நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தியுள்ள அவர் முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தகவலை தொலைக்காட்சி உரை மூலமாக மக்களுக்கு ஞானேந்திரா அறிவித்தார்.
நாட்டில் அமைதியை நிலை நாட்டவும், நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தவும் தவறிவிட்டதால் ஆட்சியைக் கலைப்பதாக மன்னர்தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் தான் துபா பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், நேபாளத்தில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரவாதிகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுப்படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் இரு தரப்பினருக்கும் பயங்கர உயிர்ச் சேதம் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் நாடு முழுவதும் ஆட் கடத்தலும் அதிகரித்துவிட்டது. ஆயிரக்கணக்கானகுழந்தைகள் கடத்தப்பட்டனர்.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்தி உள்நாட்டுக் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு துபாவுக்கு மன்னர் நெருக்கடி தந்து வந்தார்.ஆனால், பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந் நிலையில் துபா அரசைக் கவிழ்த்துவிட்ட மன்னர் ஞானேந்திரா, வரும் ஏப்ரலில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டுஜனநாயகம் காக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
துபா அரசு நாட்டின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிட்டுவிட்டு உட்கட்சி மோதலிலும் அரசியல் போட்டியிலும் ஈடுபட்டு வந்ததாகஞானேந்திரா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டிலும் துபா அரசை ஞானேந்திரா கலைத்தார். ஆனால், பின்னர் அவரையே ஆட்சியமைக்கச் சொன்னார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications