சென்னையில் ரெளடி வெட்டிக் கொலை
சென்னை:
சிறையிலிருந்து விடுதலையாகி வந்த ரெளடியை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது.
சென்னை வண்ணாரப்பேட்டையைைச் சேர்ந்தவன் தாமஸ் (வயது 35). அப் பகுதி பிரபல ரெளடியான இவன் மீது வண்ணாரப்பேட்டைகாவல் நிலையத்தில் 38 வழக்குகள் உள்ளன.
வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தாமஸ் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்த வழக்கிலிருந்து டிசம்பர் 7ம் தேதி விடுதலையானான்.
விடுதலையான தாமஸ், நேற்று ஏழுகிணறு பகுதியில் உள்ள தனது மருமகன் கிரியின் வீட்டுக்கு வந்தான். வீட்டில் யாரும் இல்லாததால், அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றான்.
அப்போது 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்தது. தாமஸை கடைக்குள்ளேயே வைத்து அக் கும்பல் சரமாரியாக வெட்டித் தள்ளியது.
படுகாயமடைந்த தாமஸை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் இறந்து விட்டார். இந்ததுணிகரக் கொலை தொடர்பாக யானைக்கவுனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பழிக்குப் பழி வாங்கவே இந்தக் கொலை நடந்துள்ளதாகத் தெரிகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications