40 எம்பி தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த ஜெ. கோரிக்கை
சென்னை:
மக்களைத் தேர்தலில் மோசடி நடந்துள்ளது. இதனால் அந்தத் தேர்தலை ரத்து செய்துவிட்டு தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்என்று கோரி வழக்குத் தொடரப் போகிறோம் என முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இன்று அறிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் தோல்வியடைந்தது. இதற்கு தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும்அதிகாரிகளுமே காரணம் என ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
இந் நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.விநாயகமூர்த்தி, மக்களவைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக்கூட்டணியின் வெற்றி குறித்து ஆளுநர் தனது உரையில் எதுவும் தெரிவிக்கவில்லை.
தேர்தல் தோல்விக்குப் பிறகுதான் தமிழக அரசு மக்களுக்கு எதிரான பல முடிவுகளையும் விலக்கிக் கொண்டது என்றார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா,
கடந்த 2001ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது, தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது. நிதி நிலைசீராகும் வரை, சில திட்டங்களை நிறுத்தி வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நிதி நிலை மேம்பாடு அடைந்ததும் மீண்டும் அந்தத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
இதனால் மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னரே தமிழக அரசுக்கு மனமாற்றம் ஏற்பட்டதாகக் கூறுவது தவறு.
கடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி உண்மையான வெற்றியும் அல்ல. அதிமுகவுக்குக் கிடைத்த தோல்விஉண்மையான தோல்வியும் அல்ல. அனைத்துத் தொகுதிகளிலும் மோசடி நடந்துள்ளது. இதை தேர்தல் ஆணையமே கூறியுள்ளது.
இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின்தேர்தல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அரசு அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறார்கள். அரசு அதிகாரிகளை மாற்றுவது, சஸ்பெண்ட் செய்வது மற்றும் பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால் கூட, தேர்தல்ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.
அவர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தேர்தல் பணியில் அதிகாரிகள் எங்களுக்கு எதிராக செயல்பட்டார்கள். இது வெறும்குற்றச்சாட்டு அல்ல, தோற்றதால் கூறும் காரணமும் அல்ல.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் மோசடி நடந்ததால் அந்தத் தேர்தலை ரத்துசெய்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி வழக்குத் தொடரப் போகிறோம் என்றார் ஜெயலலிதா.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications