மாதவன் வழக்கை கையில் எடுத்த பிரேம்குமார்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

Madhavan அர்ச்சகர் திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி பிரேம்குமார் இன்று நெல்லையில்விசாரணை நடத்தினார். இதனால் இந்த வழக்கு விசாரணை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கைத் தொடர்ந்து ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கை தோண்டியது தமிழக அரசு. இதையடுத்துதிருக்கோஷ்டியூர் அச்சகர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் சேர்க்கப்பட்டார்.

ஆனால், இந்த வழக்கில் விசாரணை வேகம் பிடிக்காமல் இருந்தது. இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்ததோடு, ஆடிட்டர் வழக்கிலும் குற்றப் பத்திரிக்கை தயாரிக்கும பணியை முடுக்கிவிட்ட பிரேம்குமார் இப்போது மாதவன்வழக்கை கையில் எடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள கோவிலில் சிவன் சன்னதியை அகற்ற ஜெயேந்திரர் யோசனை தெரிவித்து அதுசெயல்படுத்தப்பட்டது. இதையடுத்து வைணவத் தலங்களில் ஜெயேந்திரர் எப்படித் தலையிடலாம் என்று கேட்டு திருக்கோஷ்டியூர் மாதவன்பிரச்சனை கிளப்பினார்.

இந் நிலையில் சென்னையில் மாதவன் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த வழக்கில் சமீபத்தில் தான் ஜெயேந்திரரை போலீசார் சேர்த்தனர்.

இந்த வழக்கில் ஜெயேந்திரர் கைதாகும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து அது விசாரணையில்உள்ளது.

இந் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிரேம்குமார் இன்று நெல்லையில் விசாரணை நடத்தினார். நிெல்லையில் உள்ள சங்கர மடஊழியர்கள், ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரிடம் அவர் விசாரணை நடத்தினார்.

திருக்குறுங்குடிக்கும் பிரேம்குமார் செல்லக் கூடும் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+