திருக்குறுங்குடி: போலீஸ் விசாரணையால் தாமதமாகும் கும்பாபிஷேகம்
நெல்லை:
மாதவன் தாக்கப்பட்ட வழக்கு மற்றும் திருக்குறுங்குடி கோவில் கணக்காளர் கொலை ஆகியவை தொடர்பான போலீஸாரின் தீவிரவிசாரைணயால், அக் கோவிலின் கும்பாபிஷேகம் தாமதமாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் நான்குநேரியை அடுத்துள்ளது திருக்குறுங்குடி கிராமம். இந்தக் கிராமத்தில் பழமையான அழகியநம்பிராயர் பெருமாள் கோவில் உள்ளது. வைணவத் திருத்தலமான இங்கு சிவன் சன்னதியும் இருந்தது இக் கோவிலின் சிறப்பு.
ஆனால், இங்கிருந்த சிவன் சன்னதி கடந்த ஜூன் மாதம் திடீரென இடிக்கப்பட்டது. இந்த ஊரை பூர்வீகமாகக் கொண்டதமிழகத்தின் மிகப் பிரபலமான ஒரு குடும்பம் நலமாக இருக்க வேண்டுமானால் இக் கோவிலின் சிவன் சன்னதி நீக்கப்படவேண்டும் என கேரள ஜோதிடர்கள் பிரஷ்ணம் நடத்திப் பார்த்து அறிவுறுத்தியதாகவும், இதையடுத்து இத் திட்டம் ஜெயேந்திரர்மூலம் அமலாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
ஜெயேந்திதரர் தூண்டுதல் காரணமாகவே சிவன் சன்னதி இடிக்கப்பட்டதாக மெல்ல மெல்ல புகார் பரவியது. இதையடுத்து இந்தவிவகாரத்தை திருக்கோஷ்டியூர் மாதவன் உள்ளிட்ட வைணவ திருத்த பாதுகாப்பு இயக்கம் கையில் எடுத்தது.
இந்த அமைப்பின் சார்பில் ஜெயேந்திரை மிகக் கடுமையாக ஊர் ஊராகச் சென்று விமர்சித்து வந்தார் திருக்கோஷ்டியூர் மாதவன்.
இந் நிலையில் சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மிகக் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதலை முதலில்விபத்தாக பதிவு செய்த காவல்துறை, சமீபத்தில் இதை தூசி தட்டி எடுத்து தாக்குதல் வழக்கமாக மாற்றியது.
தொடர்ந்து இந்த வழக்கில் ஜெயேந்திரரை முதல் குற்றவாளியாக சேர்த்தது. இந்த வழக்கிலும் ஜெயேந்திரரைக் கைது செய்யவும்போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக இந்த வழக்கை காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளார். 12 தனிப்படைபோலீசாருடன் நெல்லையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே இந்த திருக்குறுங்குடி கோவிலின் கணக்காளர் முருகேசன் கடந்த 12ம் தேதி வள்ளியூர் அருகே ரயில்தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். முதலில் இதை விபத்தாக அதைப் பதிவு செய்த போலீஸார் பின்னர் கொலை வழக்காகமாற்றியுள்ளனர்.
இதிலும் ஜெயேந்திரருக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் தனிப்படை இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி நேற்று முருகேசனின் மனைவி முருகம்மாள், கோவில் நிர்வாகிதிருநாராயணன், வாட்ச்மேன் நம்பி பாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
தற்போது திருக்குறுங்குடி கோவிலில், இடிக்கப்பட்ட சிவன் சன்னதி மீண்டும் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலுக்குகும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
விசாரணைக்காக கோவில் நிர்வாகிகள் அடிக்கடி போலீஸாரால் அழைக்கப்படுகின்றனர். இதனால் கும்பாபிஷேகப் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன.
இக் குழப்பம் காரணமாக கும்பாபிஷேகம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications