முதல்வரின் புகாரை மறுக்கிறது சன் டிவி
சென்னை:
சுனாமி நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் புகார்களுக்கு சன் டிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சன் டிவி சார்பில் திரட்டப்பட்ட சுனாமி நிதியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க சன் டிவிக்கு உண்மையான அக்கறை இல்லைஎன்று ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு சன் டிவி நிர்வாகம் அளித்துள்ள பதில்:
சுனாமி நிவாரண பணிகளுக்கு சன் டிவி திரட்டிய நிதியைத் தரும் பிரச்சினையில் முதலமைச்சர் தொடர்ந்து தவறான கருத்துக்களைக் கூறிவருவதால் அது குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறோம்.
சன் டிவி சார்பில் சுனாமி நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டப்பட்டுள்ளதை முதல்வரின் செயலாளர்களான ஷீலா பாலகிருஷ்ணன்,ராமலிங்கம் ஆகியோரை தொலைபேசியில் ஜனவரி 11,12, 13 ஆகிய தேதிகளில் தொடர்பு கொண்டு தெரிவித்தோம்.
முதலமைச்சடரிம் சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் நேரில் வழங்க விரும்புவதாகவும், அதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும்அவர்களிடம் கேட்டோம்.
அதற்கு, பொங்கல் வரை முதல்வருக்கு அலுவல்கள் உள்ளதாகவும், 17 அல்லது 18 ஆகிய தேதிகளில் வழங்க இயலுமா என்று அவர்கள்கேட்டனர். அதற்கு ஒப்புதல் தெரிவித்தோம்.
எவ்வளவு நிதி தரப் போகிறீர்கள் என்று அப்போது எங்களிடம் கேட்கப்பட்டது. ரூ. 2.5 கோடி ரூபாய் வரை சேர்ந்திருப்பதாகத்தெரிவித்தோம். இந்த விவரத்தை பேக்ஸ் மூலம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தோம்.
இந் நிலையில் சில தினங்களுக்குப் பிறகு முதல்வரின் செயலாளரான ராமலிங்கம் எங்களைத் தொடர்பு கொண்டு, ஏற்கனவே கூறிய 17, 18ஆகிய தேதிகளில் முதலமைச்சருக்கு நேரமில்லை. எனவே தலைமைச் செயலாளரிடம் நிதியை வழங்கத் தயாரா என்று கேட்டார்.
அதற்கு நாங்கள், முதலமைச்சரிடமே நேரில் வழங்க விரும்புகிறோம். அதற்கு எந்தத் தேதியை ஒதுக்கித் தந்தாலும் நிதியைத் தரஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்தோம். முதல்வர் நேரமில்லை என்று கூறிய 17, 18 ஆகிய தேதிகளில் 50 பேரிடம் சுனாமி நிதியைப்பெற்றார் ஜெயலலிதா என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
இதைத் தொடர்ந்து முதல்வரின் இன்னொரு செயலாளரான வெங்கட்ராமன் எங்களைத் தொடர்பு கொண்டு, சுனாமி நிவாரணப்பணிகளுக்கு எவ்வளவு வழங்கப் போகிறீர்கள் என்று கேட்டார். அப்போது சுமார் 4 கோடி ரூபாய் நிதி சேர்ந்திருப்பதாக தெரிவித்தோம்.
24, 25 தேதிகளில் நிதியைத் தர இயலுமா என்று அவர் கேட்டார். எந்தத் தேதியைக் கொடுத்தாலும் அன்று வந்து நிதியைத் தருவதாகக்கூறினோம். அதன் பிறகு பலமுறை நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும், சிறிது நேரத்தில் அழைக்கிறோம் என்றுதான்கூறிக் கொண்டிருந்தார்களே தவிர கடைசி வரை அழைப்பே வரவில்லை.
இதன் பிறகு தான் பிரதமரிடம் நிதியை ஒப்படைத்தோம் என்று சன் டிவி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications