மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் மாஜி போலீஸ் அதிகாரி சரண்
திருநெல்வேலி:திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு, திருக்குறுங்குடி கோவில் கணக்காளர் முருகேசன் மர்மச் சாவுஆகியவை தொடர்பாக விசாரணைக்கு வருமாறு திருக்குறுங்குடி ஜீயர் மடத்தின் நிர்வாகி திருநாராயணன்உள்ளிட்ட 4 பேருக்கு காஞ்சி தனிப்படை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந் நிலையில் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி முத்துக்கிருஷ்ணன் உட்பட 4 பேர் இன்று காஞ்சிபுரம்நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கோவில் கணக்காளர் முருகேசன் மர்மமாக இறந்த வழக்கிலும் ஜெயேந்திரை கோர்த்து விட்டு அவர் மீது மேலும்ஒரு புதிய வழக்கு போட போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருக்கோஷ்டியூர் மாதவன் வழக்கை போலீஸார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் எஸ்.பி.பிரேம்குமார் 2 நாட்கள் நெல்லையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கில் ஜெயேந்திரர் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் கணக்காளர் முருகேசன் மர்மமான முறையில் இறந்துகிடந்தது தொடர்பான வழக்கிலும் ஜெயேந்திரர் தொடர்பு குறித்து போலீஸார் விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
இந்தச் சாவு மற்றும் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு ஆகியவை தொடர்பான விசாரணைக்கு வருமாறு தற்போதுதிறுக்குறுங்குடி ஜீயர் மடத்தின் நிர்வாகிகளில் ஒருவரும், நம்பிராயர் கோவில் மேலாளருமான திருநராயணன்,நம்பி பாண்டியன், நம்பி தலைவன், ராதா ஆகியோருக்கு காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் சம்மன்அனுப்பியுள்ளனர்.
வரும் 9ம் தேதி தனிப்படை போலீஸார் முன்பு ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாஜி ஏடிஜிபி சரண்:
இதற்கிடையே திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி முத்துக்கிருஷ்ணன் உட்பட 4 பேர் இன்றுகாஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
முத்துக் கிருஷ்ணன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் தமிழகத்தின் மிகப் புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாகப்பணியாற்றி வந்தார்.
இந்த நிறுவனத்தினரின் சொந்த ஊர் தான் திருக்கோஷ்டியூர். இங்குள்ள அழகிய நம்பிராயர் கோவிலில் இருந்த சிவன் சன்னதியைஅகற்றினால் தான் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு நல்லது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியதாகவும், இதையடுத்துஜெயேந்திரர் உதவியுடன் சன்னதியை இந் நிறுவன அதிபர்கள் அகற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதை எதிர்த்து சவுண்டு விட்டதாால் தான் திருக்கோஷ்டியூர் அர்ச்சகர் மாதவன் தாக்கப்பட்டார் என்கிறது போலீஸ்.
இந் நிலையில் இன்று காஞ்சி நீதிமன்றத்தில் சரணடைந்த முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது.
-
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications