மருத்துவமனையில் இருந்து கலாம் டிஸ்சார்ஜ்
டெல்லி:
மருத்துமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று இருந்து டிஸ்சார்ஜ்செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சியின்போது வழுக்கி கீழே விழுந்ததில், வலது தோள்பட்டையில் அவருக்கு சிறிய எலும்புமுறிவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று ராணுவ மருத்துவமனையில் அவருக்கு "closed reduction" என்ற நவீன எலும்புசிகிச்சை அளிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பதிலாக இந்த நவீன எலும்பு சிகிச்சை தரப்பட்டது.
இதையடுத்து இன்று கலாம் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்குத் திரும்பினார்.ராணுவ மருத்துவமனையை விட்டுக் கிளம்பு முன் அங்குள்ள சில நவீன ஆய்வுக் கூடங்களையும் கலாம் சுற்றிப் பார்த்தார்.
பின்னர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களுடன் சில நிமிடங்கள் பேசிய கலாம் அவர்களுக்கு நன்றிதெரிவித்து கொண்டார். மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது சிகிச்சைக்காக வந்திருந்த சில குழந்தைகளுடனும்கலாம் பேசிவிட்டே சென்றார்.
அவர் வேகமாக உடல் நலம் தேறி வருவதாகவும், அவருக்கு சில பிஸியோதெராபி பயிற்சிகள் அளிக்கப்பட இருப்பதாகவும்கலாமின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எலும்பு முறிவுக்கு நவீன முறை சிகிச்சை அளிக்கப்பட்டதால் கலாமுக்கு கட்டு ஏதும் போடப்படவில்லை.
துணை ஜனாதிபதி ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் நேற்று கலாமைமருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications