சு.சுவாமிக்கு எதிர்ப்பு: விஎச்பி தொண்டர் தற்கொலை முயற்சி!
சென்னை
விஸ்வ இந்து பரிஷத் மாநாட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விஎச்பிதொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் கூட்டம் சனிக்கிழமை இரவு நடந்தது.சங்கராச்சாரியார்கள் கைதைக் கண்டித்து நடந்த இக் கூட்டத்தில், சங் பரிவாரின் புதிய நண்பராக அவதாரம் எடுத்துள்ளசுப்பிரமணியம் சுவாமியும் கலந்து கொண்டார்.
மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, வி.எச்.பி. தலைவர் கிரிராஜ் கிஷோர், பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன்உள்ளிட்டோர் பேசிய இக் கூட்டத்தில் சுவாமியும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் சுவாமி பேசத் தொடங்கியபோது விஎச்பி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால்சலசலப்பு ஏற்பட்டது. திருவொற்றியூரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் சுப்பிரமணிய சுவாமி ஒழிக என்று கூறிக் கொண்டேமயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போதுதான் அவர் சுவாமியைகண்டித்து எலி மருந்து சாப்பிட்டிருந்தது தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினர்.
சமீப காலம் வரை பாஜக உள்பட சங் பரிவார் அமைப்புகளை குண்டக்க மண்டக்க தாக்கி வந்தவர் சுவாமி என்பதுகுறிப்பிடத்தக்கது. அதே போல ராஜிவ் காந்தி ஆட்சியின்போது சங்கர மடத்துக்கு சுவாமி தந்த தொல்லைகள் கணக்கில்அடங்காதவை என்பதை ஜெயேந்திரரே மனம் நொந்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அரசியலில் கூடு விட்டு கூடு பாய்வதில் வல்லவரான சுவாமி இப்போது சங் பரிவாரை ஆதரிப்பதோடு, ஜெயேந்திரை ஆதரித்துவருகிறார்.
ஆனால், இவர் தங்கள் அணி பக்கம் வருவதை சங் பரிவார் அமைப்புகளின் தொண்டர்கள் ரசிக்கவில்லை.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications