அப்புவை சந்திக்க அனுமதி கோரும் மனைவி
சென்னை:
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவை சந்திக்க அனுமதி கோரி அவரது மனைவிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கூலிப் படைத் தலைவன் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதவிர குண்டர் சட்டம் அவர் மீதுபாய்ந்துள்ளது.
இந் நிலையில் அவரைச் சந்திக்க அனுமதி கோரி அவரது மனைவி நிர்மலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.அதில், எனது கணவருக்கு கடந்த 10 வருடங்களாக இருதய நோய் உள்ளது. சங்கரராமன் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளஅவர் தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அவருக்கு ஒருமுறை நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சிகிச்சைக்குப் பின்னர் அவர் மீண்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க எனக்கும், எனதுகுழந்தைகளுக்கும் கடலூர் சிறை நிர்வாகம் அனுமதி கொடுக்க மறுக்கிறது.
2 நாட்களுக்கு முன்பே மனு அளிக்க வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்புகிறார்கள். அவருக்கு நல்ல மருத்துவ சிகிச்சைஅளிக்க வேண்டும். வருமான வரி கட்டுபவர் அவர், எனவே சிறையில் முதல் வகுப்பு அளிக்கப்பட வேண்டும்.
அவரை சந்திக்க அனுமதி கோரி கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தேன். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது உரியகோரிக்கை வந்தால் பரிசீலித்து அனுமதி தருவதாக சிறை நிர்வாகம் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துஎனது மனுவை நான் வாபஸ் பெற்றேன். ஆனால் அந்த வாக்குறுதியை சிறை நிர்வாகம் கடைப்பிடிக்கவில்லை.
எனவே, நானும் எனது குழந்தைகளும் அப்புவை சந்திக்க அனுமதி தர சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றுகூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சிவசுப்ரமணியம் முன் வரவுள்ளது.












Click it and Unblock the Notifications