தமிழகம் முழுவதும் பாதயாத்திரை கிளம்பும் ஜெயேந்திரர்!
சென்னை:
தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள ஜெயேந்திரர் திட்டமிட்டிருப்பதாக சங்கர மடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் ஜெயேந்திரர் தற்போது கலவையில் தங்கியிருக்கிறார். அவர் புதிதாக 2 திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
சங்கரபஜன் மண்டல் என்ற திட்டத்தின்படி, கிராமங்களைத் தத்தெடுத்து அங்கு ஆன்மீகப் பணிகளும், வேலை வாய்ப்பு பயிற்சியுடன் வேதம், மந்திரங்கள் கற்பிக்கும் பணியும் நடைபெறும்.
2வது திட்டமான பாரதீய பரிக்ரமா திட்டத்தின்படி, தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார். கிராமம், கிராமமாக செல்லும் வகையில் பாதயாத்திரை பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு திட்டங்கள் மூலம் சங்கரமடத்தின் மீது அடித்தட்டு மக்களின் நம்பிக்கையையும், மடத்திற்கு வரும் மற்ற ஜாதி இந்துக்களின் எண்ணிக்கையையும் உயர்த்த ஜெயேந்திரர் திட்டமிட்டிருக்கிறார்.
மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் பாதயாத்திரை மேற்கொண்டபோது, பூஜைப்பொருட்களை எடுத்துச் செல்ல ஒரு ரிக்ஷா வண்டியை உபயோகப்படுத்தினார். அந்த வண்டியை மீண்டும் தயார் செய்யுமாறு ஜெயேந்திரர் உத்தரவிட்டிருக்கிறார்.
தனது நடைபயணத்தின்போது முக்கிய ஊர்களில் சங்கர மடத்தின் கிளைகளைத் தொடங்கவும், ஆன்மீக ஈடுபாடு கொண்ட இளைஞர்களை சாதி வித்தியாசமின்றி மடத்தில் சேர்க்கவும் திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இந்தத் திட்டங்களை ஜெயேந்திரர் அறிவிப்பார் என்று மடத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications