அதிமுகவுக்கு அறிக்கை நகல் தர தேர்தல் ஆணையம் மறுப்பு
டெல்லி - சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியில் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் நகலை அதிமுகவிற்குத் தர தேர்தல்ஆணையம் மறுத்துவிட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், அதனால் ஒட்டுமொத்ததேர்தலையும் ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில்தெரிவித்தார்.
இதற்கு வசதியாக வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து தேர்தல் கமிஷன் நடத்திய விசாரணை அறிக்கையை தன்னிடம் வழங்கக் கோரிதேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடிதம் அனுப்பியது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்தின் ஆவணமாகும். அது ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதாகும். எந்த மாநிலத்தில்தேர்தல் முறைகேடு நடந்தாலும் அது குறித்து விசாரணை நடத்துவது வழக்கம். பிரதமர், முதல்வர் தொகுதிகளில் புகார் வந்தால் கூட அதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் நகல்களை தந்தால், அது விசாரணை அதிகாரியின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.எனவே எந்த ஒரு மாநில அரசு கேட்டாலும், விசாரணை அறிக்கையின் நகல்களை வழங்க முடியாது என்றனர்.
இதையடுத்து இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் கிளப்ப அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நரேஷ் குப்தா ஆலோசனை:
இதற்கிடையே வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி நரேஷ் குப்தா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்பதற்காக ஒரு கூட்டத்தை நரேஷ் குப்தா இன்று கூட்டியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் கலந்து கொள்ள தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications