ரஜினி வீட்டில் வருமான வரி ரெய்டு: விவகாரமாகிறது
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ரெய்டு எதையும் நடத்தவில்லை. அது வழக்கமாக நடத்தப்படும் சர்வே எனப்படும் ஆய்வுதான் நடத்தப்பட்டதுஎன்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
சமீப காலமாக அதிமுகவுடனும் முதல்வர் ஜெயலலிதாவுடனும் இணக்கம் காட்ட ஆரம்பித்திருக்கும் ரஜினியின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதன் பின்னணியின் காங்கிரசும், பழனி மாணிக்கத்தின் மூலம் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொறுப்பை தன் வசம் வைத்திருக்கும்திமுகவும் இருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.
ஆனால் இதை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா மறுத்தார். டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவரிடம் ரஜினி வீட்டுரெய்ட் பற்றி கேட்கப்பட்டபோது, அதிகாரிகள் நடத்தும் சோதனைகளுக்கும் காங்கிரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது பாஜகவுக்குத்தான் கைவந்த கலை. அரசியல் காரணங்களுக்காக அதிகாரத்தை காங்கிரஸ் தவறாக பயன்படுத்தாது என்றார்.
இதையடுத்து வருமான வரித்துறை சார்பிலும் ரஜினி வீட்டு ரெய்ட் குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. வழக்கமாக தனது சோதனைவிஷயங்கள் குறித்து இந்தத் துறை எந்த விவரத்தையும் வெளியில் சொல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி விஷயத்துக்கு அரசியல் சாயம் பூசப்படுவதால் அது குறித்து விளக்கம் தந்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். அவர்கள்கூறியதாவது:
சர்வே என்பது ரூ. 2 லட்சம் அளவுக்கு ஒருவர் பணப் பரிமாற்றம் செய்யும்போது அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இது சாதாரணஆய்வுதான். இதைத்தான் ரஜினி வீட்டில் அன்று மேற்கொண்டோம்.
வருமான வரித்துறை துணை ஆணையர் விவேகானந்தன் தலைமையிலான அதிகாரிகள்தான் ரஜினி வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். ரூ.1 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தால் தான் ரெய்டு நடத்தப்படும். அப்போதும் கூட ரெய்டு நடத்துதவற்கான வாரண்ட் இல்லாமல்யாருடைய வீட்டுக்கும் செல்ல முடியாது.
ரஜினியின் கடந்த 4 வருடங்களுக்கான வருமான வரிக் கணக்குகள் தொடர்பான ஆய்வுதான் நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கும்சந்திரமுகி படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ரஜினியின் வருமான வரிக் கணக்குகள் குறித்த கோப்புகளை மத்திய நிதியமைச்சகம் கேட்டதாக கூறப்படும் தகவல் பொய்யானது. அதில்உண்மையில்லை. யாரும் ரஜினியின் வருமான வரிக் கணக்குகள் தொடர்பான கோப்புகளை கேட்கவில்லை.
சோதனையின்போது எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. ரஜினியின் எல்ஐசி பாலிசி சமீபத்தில் முதிர்வு பெற்றது. அதன் மூலம்அவருக்கு ரூ. 48 லட்சம் வந்துள்ளது. இந்தப் பணத்தை அவர் எதில் முதலீடு செய்தார் என்ற விவரத்தை கேட்டறிந்தோம் என்றனர்.
ரஜினியின் வீடு மட்டுமின்றி ராகவேந்திரா திருமண மண்டபத்திலும் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும்கோடம்பாக்கம் மெயின்ரோட்டில் உள்ள ரஜினியின் அருணாச்சலா கெஸ்ட் ஹவுசுக்கும் ஒரு அதிகாரிகள் குழு சோதனைக்குச்சென்றுள்ளது. ஆனால், அது பூட்டப்பட்டிருந்ததால் திரும்பி வந்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications