ஹைதராபாத் ஓபன்: இறுதி போட்டியில் சானியா
ஹைதராபாத்:
ஹைதராபாத் ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் ரஷியாவின் மரியா கிரிலென்கோவை வீழ்த்தி, இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கால் இறுதியில் இஸ்ரேல் நாட்டவரான தஜி போராவை எதிர்த்து விளையாடிய சானியா மிர்ஸா 4-6, 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
மற்ற காலிறுதிப் போட்டிகளில மரியா கிரிலென்கோ (ரஷியா), அன்னா லெனா (ஜெர்மனி), அல்யோனா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்றனர். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா, மரியா கிரிலென்கோவை எதிர்த்து விளையாடினார்.
இதில் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் சானியா வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில அன்னா லெனா, அல்யோனாவை எதிர்த்து விளையாடுகின்றார். இவர்களில் யார் வெற்றி பெறுகிறாரோ, அவருடன் சானியா இறுதிப்போட்டியில் மோதுவார். கோப்பையை வெல்பவருக்கு 1,40,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இரட்டையர் ஆட்டத்தில் மார்ட்டினா நவரத்திலோவா - அன்னா லெனா ஜோடி, அகுல்- பனோவ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் 3-2 என்ற கணக்கில் நவரத்திலோவா ஜோடி முன்னணியில் இருந்தபோது, அன்னா லெனா காயமடைந்து போட்டியில் இருந்து விலகினார். இதனால் அகுல்- பனோவ் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications