அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி
சென்னை:
தமிழக வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரித் தாமஸ் கமிட்டியின் அறிக்கை நகலை எதற்காக கேட்கிறீர்கள் என்றுகேட்டு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பெருமளவிலான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுப்போயிருந்தன. இதுதொடர்பாக கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் விசாரணை நடத்தினார்.
இந்த அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் நகலை அதிமுக கேட்டுள்ளது.
மக்களளைத் தேர்தலில் முறைகேடு நடந்ததால் தான் அதிமுக தோற்றதாகவும், இதனால் தமிழகத்தில் நடந்த தேர்தலை ரத்துசெய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தக் கோரி வழக்குத் தொடரப் போவதாகவும் அதிமுக கூறியுள்ளது.
இதற்காக தாமஸ் நடத்திய விசாரணையின் அறிக்கை தேவைப்படுவதாகவும் அதிமுக கூறியுள்ளது.
இந் நிலையில் மத்திய துணைத் தேர்தல் ஆணையர் ஏ.என்.ஜா டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விசாரணைக் கமிஷன் அறிக்கை நகலைத் தருமாறு அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. எதற்காக நகலை கேட்கிறீர்கள் என்றுஅந்தக் கட்சிக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம்.
நாடு முழுவதும் தற்போது வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலமாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில்தமிழகத்தில் மட்டும் வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக கோருவதை ஏற்பது கடினம் என்றார்ஜா.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications