ரகு, அய்யர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததில் விதிமீறல்!
ராஜபாளையம்:
குண்டர் சட்டத்தின் கீழ் விஜயேந்திரரின் தம்பி ரகுவும், சுந்தரேச அய்யரும் கைது செய்யப்பட்டதில் தமிழக அரசு விதிகளை காற்றில்பறக்கவிட்டுள்ளது.
ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமானால், அடிப்படையாகப் போடப்பட்ட ஒரு வழக்குத் தவிர இன்னொரு மிகக்கடுமையான வழக்கும் இருக்க வேண்டும்.
இந்த இருவர் விஷயத்திலும் சங்கரராமன் கொலை வழக்கு என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டுடன் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவதாக அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் சாதாரணமானவை.
குறிப்பாக அய்யர் மீது மடத்தின் கணக்குகளைத் திருத்தியதாக வழக்கு பதிவாகியுள்ளது. இதை மாபெரும் கிரிமினல் வழக்காகக் கருதப்படமுடியாது.
குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்வது குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மிகக் கடுமையான முதல் வழக்குதவிர, இன்னொரு மிகப் பெரிய குற்றச்சாட்டுடனான வழக்கு இருந்தால் மட்டுமே ஒருவரை குண்டர் சடத்த்தில் கைது செய்யலாம் என்றுகூறப்பட்டுள்ளது.
அதுவும் பொது அமைதி கெடும் என்ற சூழல் இருந்தால் மட்டும் ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையொட்டி சமீபத்தில் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கும் எஸ்பிக்களுக்கும் ஒரு சுற்றறிக்கைஅனுப்பியது. அதில்,
குண்டர் சட்டத்தில் ஒருவரைக் கைது செய்யும்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் மனதில் கொள்ளப்பட வேண்டும்.
ஒருவர் தானே ஒரு கிரிமினல் கும்பலுக்கு தலைமை தாங்கினாலோ, அல்லது கிரிமினல் கும்பலில் இடம் பெற்றிருந்தாலோ, வழக்கமாகவேகுற்றங்களில் ஈடுபட்டாலோ, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையிலான கொள்ளை போன்ற குற்றங்களைதொடர்ந்து செய்தாலோ அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்.
தனி ஒரு வழக்குக்காக ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தால் அதை எதிர்த்து ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் தாக்கல் செய்வதைநீதிமன்றங்கள் அனுமதிக்கும். இதனால் இந்தச் சட்டத்தில் ஒருவரை கவனமுடம் தான் கைது செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
ஆனால், அரசு தான் அனுப்பிய சுற்றறிக்கையையை மீறித்தான் சுந்தரேச அய்யரையும், ரகுவையும் தவறாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்துள்ளதாக ராஜபாளையத்தில் உள்ள மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் மூலம் தனது உத்தரவை அரசே மீறியுள்ளது என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அந்த மிக மூத்த அதிகாரி. காஞ்சிபுரம்கலெக்டரும் எஸ்பியும் விதிகளை மீறி எப்படி இவர்களை வரிசையாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதித்தார்கள் என்றேதெரியவில்லை என்கிறார் அவர்.
மேலும் குண்டர் சட்டக் கைதுகள் குறித்து மறு ஆய்வு செய்யும் ஆலோசனைக் கமிட்டியும் இந்த விஷயத்தில் மிகத் தெளிவானகொள்கையை வகுத்துள்ளது. 302வது பிரிவின்படி கொலை வழக்கில் ஒருவரைக் கைது செய்யும்போது அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யக் கூடாது என்று இந்தக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் குண்டாசில் கைது செய்யப்பட்ட சிலரை தமிழக அரசு விடுவித்ததும் உண்டு.
இதன் அடிப்படையில் தான் ரகு தன்னை குண்டாசில் கைது செய்யப்பட்டது செல்லாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
ரகு, அய்யர் தவிர சங்கரராமன் கொலையில் கைது செய்யப்பட்ட மேலும் 14 பேரையும் குண்டாசில் உள்ளே தள்ளியுள்ளது தமிழக அரசுஎன்பது குறிப்பிடத்தக்கது.
மறுஆய்வு குழுவிடம் முறையீடு:
இதற்கிடையே சங்கரராமன் வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுந்தரசே அய்யர், ரகு, கதிரவன், அம்பிகாபதி, மீனாட்சி சுந்தரம்,ஆனந்தகுமார், மாட்டு பாஸ்கர், குமார், அனில், ரஜினி ஆகியோர் மறு ஆய்வுக் குழுவிடம் தங்களை விடுவிக்குமாறு கோரி மனு செய்துள்ளனர்.
இன்று இவர்களது மனுக்கள் விசாரிக்கப்பட்டன. இதையொட்டி இந்த 10 பேரும் மறு ஆய்வுக் குழுவின் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தங்களை குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்தது நியாயமற்றது என்று 10 பேரும் தெரிவித்தனர்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications