சத்தியமூர்த்தி பவனில் கலவரம் செய்த தொண்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் களேபரத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியினர் பிற கட்சியினருடன் எல்லாம் மோதுவதே இல்லை. தங்களுக்குள் மட்டுமே அடித்துக் கொள்ளும் சிறப்புபெற்றவர்கள்.

நேற்றும் இப்படிப்பட்ட ஒரு கோஷ்டிக் கலவரம் சத்தியமூர்த்தி பவனைக் கலக்கியது. மாநில இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த நான்குமாவட்ட தலைவர்கள் சமீபத்தில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்களது ஆதரவாளர்கள்சத்தியமூர்த்தி பவனில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணு பிரசாத் (வாசன் கோஷ்டிக்காரர்) பொறுப்பில்லாமல், தன் இஷ்டத்திற்கு நடந்து கொள்கிறார்.அவரது போக்கு சர்வாதிகாரி போல உள்ளது. அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி போராட்டக்கார்ரகள்(இளங்கோவன் மற்றும் பிற கோஷ்டியினர்) கோஷமிட்டனர்.

அப்போது அவர்களில் சிலர் முதல் மாடிக்குச் சென்று அங்குள்ள விஷ்ணு பிரசாத்தின் அறை முன்பு இருந்த பெயர்ப் பலகையை இழுத்துப்போட்டு உடைத்தனர். பின்னர் பூட்டியிருந்த கதவை காலால் உடைத்தனர்.

இதையடுத்து மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏவும் வாசன் கோஷ்டியின் முக்கியஸ்தருமான விநாயகமூர்த்தி மற்றும் சிலர் அங்கு வந்துஅவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இந்த சத்தத்யைெல்லாம் கேட்டவாறே அமைதியாக தனது அறைக்குள் உட்கார்ந்திருந்தார் வாசன்.

அப்போது சிலர் கூறவே வாசனிடம் போய் வெளியே பெரிய களேபரம் நடக்கிறது. வந்து பாருங்கள் என்று கூறினர். இதன் பின்னரே அவர்எழுந்து வந்து போராட்டம் நடத்திய தொண்டர்களை சந்தித்தார்.

எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். முதலில் கலைந்து செல்லுங்கள், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றுவாசன் எச்சரித்த பின்னரே அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்தத் தொண்டர்கள் போராட்டம் நடத்தியபோது விஷ்ணுபிரசாத் கோஷ்டியினர் அங்கில்லை. இருந்திருந்தால் பெரும் அடிதடிநடந்திருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+