ஜெயேந்திரர்: வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் 1 ரூபாய் அபராதம்!
சென்னை:
நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக வழக்கறிஞர் ஒருவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ. 1 அபராதம் விதித்தது.
கந்தசாமி சிங் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில், ஜெயேந்திரர்போன்ற பெரிய மனிதர்களை கைது செய்யக் கூடாது. அவர் மீதான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கற்பக விநாயகம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பார்த்ததும் நீதிபதிகள்கோபமடைந்தனர்.
இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர்கந்தசாமி சிங்குக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர்.
இதைக் கேட்டதும் வெலவெலத்துப் போன கந்தசாமி சிங், தன்னிடம் அந்த அளவுக்கு பண வசதி இல்லை என்று கூறி, இனிமேல்இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய மாட்டேன் என்று கெஞ்சினார்.
இதைத் தொடர்ந்து அபராதத் தொகையை ரூ. 1 ஆக குறைத்து உத்தரவிட்டார் நீதிபதி கற்பகவிநாயகம்.
பின்னர் கோர்ட் அலுவலகத்தில் போய் ஒரு ரூபாய் அபராதத் தொகையை கட்டி விட்டு அவசரமாக நடையைக் கட்டினார் வழக்கறிஞர்கந்தசாமி சிங்!
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications