உலகில் அமெரிக்காவை அதிகம் வெறுக்கும் நாடு?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

உலகிலேயே அமெரிக்காவை மிக மோசமாக வெறுக்கும் மக்கள் பாகிஸ்தானிர்கள் தான் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Congressional Research Service (CRS) என்ற அமைப்பு நடத்திய சர்வேயின்படி,

அமெரிக்காவை பாகிஸ்தானின் பழமைவாதிகள் மட்டுமல்ல, லிபரல்கள் எனப்படும் தாராளமய கொள்கைகளில் நம்பிக்கைகொண்டவர்களும், கற்றவர்களும் கூட வெறுக்கின்றனர். பாகிஸ்தான் மெதுவாக மதப் பழமைவாதத்துக்குள் புதைந்துகொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்க எதிர்ப்பும் அதிகரித்தபடியே இருக்கிறது.

மதத் தீவிரவாதிகளை ஒடுக்குவேன் என அதிபர் முஷாரப் கூறிக் கொண்டிருந்தாலும் நாட்டின் மேற்குப் பகுதிகளில்பழங்குடியினர் முழுக்க முழுக்க மதப் பழமைவாதிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர். இங்கு மதத் தீவிரவாதிகளை ஒடுக்கராணுவத்தால் முடியவில்லை.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக ஹெராயின் கடத்தலில் இந்தஅமைப்புக்கு பெரும் பங்கு உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை ஆப்கானிஸ்தான், காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஐஎஸ்ஐவழங்குகிறது என்று திடுக்கிடும் வகையில் போகிறது அந்த ஆய்வு அறிக்கை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+