சென்னை துறைமுகத்தில் பயங்கர தீ: 70,000 டன் நிலக்கரி சாம்பல்
சென்னை:
சென்னை துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 70,000 டன் நிலக்கரி எரிந்து சாம்பலானது.
சென்னை துறைமுகத்தின் 10வது நுழைவாயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இங்கு நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
தீ விபத்தில் இங்கு வைக்கப்பட்டிருந்த 70,000 டன் நிலக்கரியும் எரியத் தொடங்கியது. நிலக்கரி அனைத்தும் எரிந்ததால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் நடந்த போது அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இருப்பினும் தீ பரவத் தொடங்கியதுமே அவர்கள் அனைவரும் பத்திரமாக அங்கிருந்து தப்பி விட்டனர்.
ஒரிஸ்ஸாவின் மகாநதி பகுதியிலிருந்து இந்த நிலக்கரி கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இது மின் தயாரிப்புக்காக கர்நாடகத்திற்கு அனுப்பப்படவிருந்தது. தீயில் எரிந்த நிலக்கரியின் மதிப்பு ரூ. 50 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications