மதுரையில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றம்: ஒரே நாளில் 12 கோவில்கள் தரைமட்டம்
மதுரை:
மதுரையில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 12 கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்ற மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2 வாரமாக மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீவிர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக மதுரை நகரின் சாலைகள் அகலமாகியுள்ளன, பல தெருக்களும் அகலமாகியுள்ளன. மதுரை நகரமே விசாலமாகி வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது 12 சாலையோர கோவில்களை அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இவற்றில் பல கோவில்கள் மாரியம்மன், பிள்ளையார் கோவில்களாகும்.
செவ்வாய்க்கிழமையன்று மாரியம்மன் கோவில்கள் இடிக்கப்பட்டதால் பெண்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். நாளைக்கு வந்து இடித்து விட்டுப் போங்களேன் என்று அவர்கள் அதிகாரிகளிடம் கோரினர். ஆனாலும் தங்களது கடைமையைத்தான் செய்வதாக கூறிய அதிகாரிகள் கோவில்களை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளினர்.
பல இடங்களில் கோவில்களில் இருந்த பொருட்களை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே எடுத்துக் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற உதவினர்
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications