மைசூர் சிறையில் தமிழர்கள் சித்திரவதை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
டெல்லி:
மைசூர் சிறையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள (வீரப்பனுடன் தொடர்புடையதாக புகார் கூறப்பட்டவர்கள்) 50 தமிழ்க் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழ் நாய்கள் என்ற அடைமொழியுடன் இவர்களை அழைக்கும் ஜெயிலர்கள் முறையாக உணவு கூட தராமல் தாக்கி வருகின்றனர். ஆண், பெண் கைதிகளின் செக்ஸ் உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது கொடுமைகளும் அரங்கேறி வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பல்வேறு புகார்கள் வந்தாலும் கர்நாடக அரசு, அந்த ஜெயிலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. இந்த விவரம் அரசல் புரசலாக தெரிய வந்தாலும் தமிழக அரசும் மெளனமே சாதித்து வருகிறது.
இந் நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகினார் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
அவர் அனுப்பிய புகாரில்,
மைசூர் சிறையில் உள்ள தமிழ்க் கைதிகளை கன்னட மொழி பேசும் ஜெயிலர்கள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். ஆனால் அந்த அதிகாரிகள் மீது இதுவரை சிறை நிர்வாகம் ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை.
இந்த சித்திரவதை குறித்து நக்கீரன் உள்ளிட்ட பல பத்திரிக்கைகளில் விரிவான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்க் கைதிகளை மிகக் கொடுமையாக தாக்குவதற்கு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. (கன்னட கைதிகளை விட்டுத் தாக்குவது).
எனவே தமிழர்களின் உயிரைக் காக்க மனித உரிமை ஆணையம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும். 50 பேரின் உயிர்களையும் மனித உரிமைகளையும் காக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ராதாகிருஷ்ணன்.
இந்த மனுவை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் இதுதொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications