ஜெ: 57வது பிறந்த நாள்- 57 கிலோ கேக்!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் 57 கிலோ எடையுள்ள கேக் வெட்டி அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று 57வது பிறந்த நாள். இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர், ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் 57 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது.
கட்சியின் அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் கேக்கை வெட்டி அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கினார். பிறந்த நாள் விழா மலரை பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பால்குடம் எடுப்பது, தீச் சட்டி ஏந்துவது, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் உள்ள பல்வேறு கோவில்களில் ஜெயலலிதாவுக்காக சிறப்பு அபிஷேகங்கள், தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல் நிகழ்ச்சிகளும் நடந்தன.
ஆளுநர் வாழ்த்து: முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தொலைபேசியில் ஜெயலலிதாவுடன் பேசிய அவர் நீண்ட நலத்துடன் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என வாழ்த்தினார்.
இதேபோல, அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், அரசுத் துறை செயலாளர்கள் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெவித்தனர்.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!











Click it and Unblock the Notifications