சென்னை மாநகராட்சியில் திமுக பெரும் ரகளை
சென்னை:
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டன.
மாநகராட்சியின் 2005-06ம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது.
விவாதம் தொடங்கியவுடன் திமுக உறுப்பினர்கள் எழுந்து, துணை மேயர் கராத்தே தியாகராஜனுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது கராத்தே தியாகராஜன் வாசித்த அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், எதிர்க் கட்சியினர் குறித்தும் தெரிவித்த கடுமையான கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கோரினர்.
இவர்களுக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டதால் அவையில் அமளி-துமளி ஏற்பட்டது.
இந் நிலையில் திமுக கவுன்சிலர்கள் கராத்தே தியாகராஜன் இருக்கைக்கு முன் கூடி அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சில கவுன்சிலர்கள் கராத்தேவை திட்டி கோஷமிட்டனர். இதனால் மேலும் பரபரப்பு அதிகரித்தது.
இந் நிலையில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் கல்யாண சுந்தரம் என்பவரை அவையை விட்டு வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு கராத்தே தியாகராஜன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்தது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications