3வது மொழிப் போர்: ராமதாஸ் அறிவிப்பு
திண்டிவனம்:
திருச்சியில் நடைபெறும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்க மாநாட்டில் மூன்றாவது மொழிப் போர் அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் தலைமை செயற்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டதன் முக்கியக் காரணம், தாய் மொழியைக் காப்பாற்றுவதுதான். மூன்றாவது மொழிப் போரைதொடங்கி வேண்டியது அவசியமாகியுள்ளது. இது தொடர்பாக திருச்சியில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்பு வெளியாகும்.
மாநாட்டுக்கு முன்பாக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்களான நான், திருமாவளவன், பழ. நெடுமாறன், டாக்டர் சேதுராமன் ஆகியோர்கலந்து கொள்ளும் ஊர்திப் பயணம் நடக்கும்.
சென்னையிலிருந்து நான் தொடங்கவுள்ள ஊர்திப் பயணத்தை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச் சொற்கள் அடங்கிய பெயர் பலகைகளை வைக்கத்திட்டமிட்டுள்ளோம்.
தமிழ் இசையை வளர்க்கும் அரும் பணியை பாமக மகளிர் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளோம். பொங்கு தமிழ் வளர்ச்சிக்கு தனி பயிலரங்கம்அமைக்கவுள்ளோம்.
கூட்டணியைப் பொருத்தவரை இரண்டு உண்டு. ஒன்று அரசியல் கூட்டணி, இன்னொன்று தேர்தல் கூட்டணி. இதில் தேர்தலுக்கு முன்புகூட்டணி அமைத்து, வெற்றிக்குப் பிறகு ஆட்சியிலும் பங்கேற்பதுதான் அரசியல் கூட்டணி.
தேர்தல் கூட்டணி என்பது, தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்து போட்டியிடுவது, ஆனால் ஆட்சியில் பங்கேற்காதது.
பாமகவைப் பொருத்தவரை தேர்தல் கூட்டணியைத்தான் இதுவரை நாங்கள் வைத்துள்ளோம். இனியும் தேர்தல் கூட்டணியே வைப்போம்.ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். பொது எதிரியான அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் எங்களது ஒரே நோக்கம்என்றார் ராமதாஸ்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications