ஹரியாணாவில் காங். பெரும் வெற்றி.. ஆனாலும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஹரியாணா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அங்கு ஆட்சியில் இருந்த ஓம் பிரகாஷ் செளதாலாவின்இந்திய தேசிய லோக் தள் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது. அதே போல இங்கு பா.ஜ.கவும் பெரும் தோல்வி அடைந்துள்ளது.

இங்குள்ள 90 இடங்களில் ஆட்சியமைக்க 45 இடங்கள் தேவை. இங்கு காங்கிரஸ் 68 இடங்களைப் பிடித்து பெரும் சாதனைபடைத்துள்ளது. 1970க்குப் பின் காங்கிரஸ் இங்கு மாபெரும் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

செளதாலாவின் தந்தை தேவிலாலால் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஒழிக்கப்பட்டது. இப்போது மீண்டும் அக் கட்சி பெரும் வெற்றிபெற்றுள்ளது.

இதுவரை ஆட்சியில் இருந்த செளதாலாவின் இந்திய தேசிய லோக் தளத்துக்கு வெறும் 9 இடங்களே கிடைத்துள்ளன.

கடந்த தேர்தலில் செளதாலாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு பெரும் வெற்றியைப் பெற்ற பா.ஜ.க. இம்முறை தனித்துப்போட்டியிட்டு மண்ணைக் கவ்வியுள்ளது. அக் கட்சிக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இம் மாநிலத்தில் சுயேச்சைகள் 11 இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பஜன்லால், பன்சிலால் உள்பட கட்சியின் முன்னாள் முதல்வர்களும் மாநில காங்கிரஸ் தலைவரும், மேலும் பலரும் முதல்வர் பதவிதங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என கோரி வருகின்றனர்.

இதனால் தேர்தலில் வென்றாலும் கட்சியை ஒற்றுமையாக வைத்து முதல்வரைத் தேர்வு செய்வதில் காங்கிரசுக்கு பெரும் பிரச்சனைஉருவாகியுள்ளது.

அனைத்துத் தலைவர்களுமே சோனியாவின் முடிவுக்குக் கட்டுப்படப் போவதாக அறிவித்துள்ளதால் அக் கட்சியின் கொஞ்சம் நிம்மதியும்தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+