மலேசியா: 17,000 இந்தியர்கள் வெளியேற்றம்
கோலாலம்பூர்:
சட்ட விரோதமாக மலேசியாவில் குடியேறியவர்கள் அந் நாட்டை விட்டு வெளியே விதிக்கப்பட்ட 4 மாத கெடு இன்றுடன் முடிவடைகிறது.இந் நிலையில் கடந்த 4 மாதங்களில் அந் நாட்டை விட்டு 17,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை மனிதாபிமானமில்லாமல் நடத்தி வருகிறது மலேசியா. விசாரணையே இல்லாமல் சிறையில்அடைப்பது, பட்டினி போடுவது போன்ற நடவடிக்கைகளில் அந் நாடு ஈடுபட்டு வருகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு போலி ஆவணங்களால் அந் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டஅப்பாவிகள்.
இந் நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களுக்ககு 4 மாத பொது மன்னிப்பு வழங்குவதாகவும், அதற்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் மலேசியா அறிவித்தது.
அந்தக் கெடு இன்று முடிவடைந்தது. தையடுத்து நாடு முழுவதும் இன்று மலேசிய போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் 110பேர் சிக்கினர். இவர்களில் பெரும்பான்மையினர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 4 மாத காலத்தில் சட்ட விரோதமாக மலேசியாவில் குடியேறிய சுமார் 4 லட்சம் பேர் அந் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இதில் 17,000 பேர் இந்தியர்கள். இதிலும் பெரும்பான்மையினர் தமிழர்கள் என மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துளளது.
இவர்களில் 4,000 பேரிடம் பாஸ்போர்ட் கூட இல்லை. அவை ஏஜென்டுகளிடம் சிக்கிவிட்டன அல்லது அவை போலியானபாஸ்போர்ட்டுகள். இதனால் இவர்கள் நாடு திரும்புவதற்காக இந்தியத் தூதரகம் புதிய பாஸ்போர்ட்டுகளை வழங்கியுள்ளது.
இதற்கிடையே சட்ட விரோதமாகக் குடியேறிவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.ஆபரேசன் தேகாஸ் என்ற பெயரில் பல இடங்களில் ரெய்ட் நடந்து வருகிறது.
கோலாலம்பூரில் ஒரு கட்டுமானப் பணி நடக்கும் இடத்தை போலீசார் துப்பாக்கிகள், உருட்டுக் கட்டைகளுடன் சுற்றி வளைத்தனர்.அப்போது பிடிபட்ட 40 வெளிநாட்டுத் தொழிலாளிகளை அடித்து, உதைத்து வேன்களில் ஏற்றிச் சென்றனர்.
இவர்களுக்கு சாட்டை அடியில் ஆரம்பித்து, நீண்ட நாள் சிறை தண்டனை வரை விதிக்கப்படவுள்ளது.
தனது நாட்டின் கட்டுமானப் பணிகளுக்கும், தோட்டங்களில் பணியாற்றவும், தொழிற்சாலைகளில் வேலை செய்யவும், வீட்டுவேலைகளுக்கும் பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களையே மலேசியா நம்பியுள்ளது.
இதனால், இந்தோனேஷியா, இந்தியா, வங்கதேசம், பிலிப்பைன்ஸில் இருந்து ஏராளமானோர் அந் நாட்டுக்கு வேலை தேடி குவிந்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications