ஆடிட்டர் வழக்கிலும் அப்ரூவராகிறார் ரவி சுப்பிரமணியம்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆக முடிவு செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ஆகியுள்ள ரவி சுப்பிரமணியம் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசுத் தரப்புமுதன்மை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை ராதாகிருஷ்ணன் வழக்கிலும் அப்ரூவர் ஆகுமாறு போலீஸார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து அந்தவழக்கிலும் அப்ரூவர் ஆக ரவி சுப்பிரமணியம் முடிவு செய்துள்ளார்.
சென்னை எழும்பூர் 6வது பெருநகர மாஜிஸ்திரேட் சாம்பசிவம் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் ரகசியவாக்குமூலம் தர விரும்புவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மனு ஒன்றையும் அளித்தார்.
இதைத் தொடர்ந்து 24 மணி நேர கால அவகாசம் கொடுத்த நீதிபதி அதன் பின்னர் வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிட்டார். ஆடிட்டர்வழக்கில் அப்ரூவர் வாக்குமூலம் அளிக்கவே எழும்பூர் நீதிமன்றத்தில் ரவி சுப்பிரமணியம் ஆஜர்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று அல்லது நாளை அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி ஆடிட்டர் வழக்கிலும் அப்ரூவர் வாக்குமூலம் அளிப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கிலும் காஞ்சி தனிப்படை போலீஸார் குற்றப்பத்திரிக்கையை இறுதி செய்து தாக்கல்செய்வார்கள் என்று தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications