ஆடிட்டர்: அப்ரூவரான ரவி ரகசிய வாக்குமூலம்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரருக்கு எதிராக காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியம் இன்று அப்ரூவர்வாக்குமூலம் அளித்தார்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டிருந்த ரவி சுப்பிரமணியம், அந்த வழக்கில் அப்ரூவராகமாறினார். இதையடுத்து குற்றவாளிகள் பட்டியலிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில், காஞ்சி மடத்தின் பக்தரும் ஆடிட்டருமான ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கிலும் அவர் அப்ரூவர் ஆகியுள்ளார். இந்தவழக்கில் ஜெயேந்திரர், ரகு, அப்பு, கதிரவன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் அப்ரூவராக முடிவு செய்துள்ள ரவி சுப்பிரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை எழும்பூர் 6வது மெட்ரோபாலிட்டன்மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது விருப்பத்தைத் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு விதிமுறைப்படி 24 மணி நேரஅவகாசம் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று எழும்பூர் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் ரவி சுப்பிரமணியம் கொண்டுவரப்பட்டார்.
அங்கு நீதிபதியிடம் பூட்டிய அறையில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதை எழுத்துப் பூர்வமாக நீதிபதி பதிவுசெய்து கொண்டார்.
வழக்கறிஞர்கள் முன் ஜாமீன் வழக்கு:
இதற்கிடையே ரவி சுப்பிரமணியத்தை சிறைக்கு சென்று மிரட்டியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் சண்முகம்,தியாகராஜன், ரேவதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது இரு தரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதி, பிற்பகலுக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications