அரசு மரத்தை வெட்டியதாக வழக்கு: ஆற்காடு வீராசாமியின் தம்பி தலைமறைவு!
சென்னை :
சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள மரத்தை அனுமதியின்றி வெட்டியதாக திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமியின் தம்பிதேவராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜ், சென்னையில் செவன்ஸ்டார் என்ற விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறார். நகரின் முக்கியஇடங்களில் இந்த நிறுவனத்தின் விளம்பரப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியில் இருந்தபோது அரசு நிலத்தில் முறைகேடாக தனது விளம்பரப் பலகைகளை அனுமதியில்லாமல் வைத்து காசு பார்த்துவந்தார் தேவராஜ். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொஞ்சம் அடங்கினார்.
இந் நிலையில் அண்ணா சாலை, அண்ணா சிலை அருகே உள்ள அரசினர் தோட்ட வளாகத்தை ஒட்டி ஒரு இடத்தில் விளம்பரப் பலகையைநிறுவ தேவராஜ் நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஊழியர்கள் சென்றனர்.
விளம்பரப் பலகை வைக்கப்படவிருந்த இடத்தில் ஒரு மரம் நீட்டிக் கொண்டிருந்தது. விளம்பரப் பலகை வைப்பதற்கு அது இடையூறாகஇருந்தாதல் மரத்தை அவர்கள் வெட்டியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது மாநகராட்சி அதிகாரி பாஸ்கர் என்பவர் அரசினர் தோட்டகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரைப் பதிவு செய்த போலீஸார், தேவராஜ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சுந்தர மகாலிங்கம், ராஜசேகரன் ஆகிய இருவரையும்கைது செய்தனர். செவன்ஸ்டார் நிறுவனம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவராஜையும் கைது செய்ய போலீஸார் முயற்சித்து வருகின்றனர். அவர் தற்போது தலைமறைவாகி விட்டார்.
ஏற்கனவே சட்டவிரோதமாக விளம்பரப் பலகை வைத்தது தொடர்பாக ஒருமுறை கைது செய்யப்பட்டவர் தேவராஜ் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications