கொலை: 29 நாட்களில் படுவேக தீர்ப்பு!
சென்னை :
29 நாட்களில் கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்து சாதனை படைத்துள்ளார் விரைவுநீதிமன்ற நீதிபதி செல்வகுமார்.
வழக்கமாக இந்தியாவில் கொலை வழக்குகள் வருடக் கணக்கில் நடக்கும். கொலை செய்தவர் போய்ச் சேர்ந்த பின்னர் கூட தீர்ப்புகள்வெளியானதும் உண்டு.
இந் நிலையில் தான் 29 நாட்கள் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது விரைவு நீதிமன்றம்.
கடந்த மாதம் 7ம் தேதி சென்னையைச் சேர்ந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியான முனுசாமி என்பவரை ஜெயராமன் என்பவர் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்தார். இதையடுத்து ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது.
21ம் தேதி இந்த வழக்கில் போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து 14 சாட்சிகளிடம் நீதிபதி செல்வகுமார்விறுவிறுவென விசாரணை நடத்தினார். அதில் முனுசாமிக்கும் ஜெயராமனுக்கும் முன் விரோதம் இருந்தது தெளிவானது.
இதையடுத்து ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பை வழங்கினார் நீதிபதி.
கொலை நடந்த 29வது நாளில் கொலையாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் போலீசாரும் வேகமாகசெயல்பட்டனர். அதைவிட வேகமாக நீதிமன்றம் செயல்பட்டுள்ளது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications