வதந்தி பரப்பியது சன் டிவி: ஜெ கடும் தாக்கு
சென்னை:
திமுக எம்எல்ஏக்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டதையடுத்து எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் (பாஜக தவிர) அண்ணா சாலையில் கூடி சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவர்களை போலீசார் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று, பின்னர் விட்டுவிட்டனர்.
பெரும் பரபரப்புடன் இன்றைய சட்டசபைக் கூட்டம் முடிந்தவுடன், நிருபர்களை சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா (வழக்கமாக சபை முடிந்தவுடன் வீட்டுக்குக்கிளம்புவார், நிருபர்களை சந்திப்பது மிக அரிது),
அண்ணா சாலையில் கூடிய எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. கருணாநிதியைக் கைது செய்துவிட்டதாக அவரது குடும்பத் தொலைக்காட்சி(சன் டிவி) வதந்தி பரப்பியது. யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் இப்போதைக்கு முடிவுக்கு வந்துவிட்டது.
திமுகவினரை சட்டசபையை விட்டு வெளியேற்றியதை வைத்து அரசியல் லாபம் தேட எதிர்க் கட்சிகள் முயல்கின்றன.
முதலில் கோட்டைக்கு எதிரே சாலையில் கூடி இவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால், இவர்களது போராட்டத்துக்குயாரும் ஆதரவு தரவில்லை. போககுவரத்து திருப்பிவிடப்பட்டதால், கூட்டம் சேரவில்லை. இதனால் கூட்டம் இருக்கும் இடமாகப் பார்த்து, மெண்ட் ரோட்டில் அண்ணாசிலைக்கு அருகில் போய் நின்றனர்.
அங்கு கருணாநிதியும் வந்து சேர்ந்தார். தன்னைக் கைது செய்யுமாறு போலீசாரிடம் கூறினார். ஆனால், போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை. தன்னைக் கைது செய்துபோலீஸ் வேனில் ஏற்றிச் செல்வார்கள் என்று கருணாநிதி எதிர்பார்த்தார்.
ஆனால், அப்படியேதும் நடக்காததால் தனது சொந்த காரிலேயே ஏறி வீட்டுக்குப் போய்விட்டார். பத்திரமாக வீடு போய் சேர்ந்துவிட்டார்.
இந்த முழு நாடகத்தையும் எதிர்க் கட்சிகள் திட்டமிட்டு நடத்தின. குறிப்பாக, திமுகவினர். தங்களை அவையை விட்டு வெளியேற்றியதை வைத்து அரசியல் லாபம்அடிக்க அவர்கள் திட்டமிட்டனர் என்றார்.
முன்னதாக திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்ட பின், எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் வெளியேறிய பின் அதிமுக மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டசபையில்அமர்ந்திருந்தனர். அப்போது ஜெயலலிதா பேசியதாவது:
எதிர்க் கட்சியினரின் செயலால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு அவர்களுக்குத் தான்.
மரம் வெட்டிய வழக்கில் ஆற்காடு வீராசாமி மீது அரசு எந்த குற்றத்தையும் சாட்டவில்லை. அவரது சகோதரர் மீது தான் குற்றம் சாட்டப்பட்டது. தங்களது சமூக விரோதசெயலை மறைப்பதற்காகத் தான், திமுகவினர் சபாநாயகரின் முன் கூடி அமளி செய்து, சபாநாயகரையே வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினர்.
திமுகவினருடன் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து அவையை விட்டு வெளியேறியது துரதிஷ்டவசமானது. கூட்டணிக் கட்சி என்பதால்வெளியேறியிருக்கின்றனர்.
திமுகவின் இச் செயலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார் ஜெயலலிதா.
இதையடுத்துப் பேசிய சபாநாயகர் காளிமுத்து, அரசினர் தோட்டம் சட்டசபையின் கட்டுப்பாட்டில் தான் வருகிறது. அந்த தோட்டத்தில் மரத்தை வெட்டிய இருவரைக்கைது செய்து நடவடிக்கை எடுத்த அரசைப் பாராட்டுகிறேன் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications