யுஎஸ் பட்ஜெட்: இந்தியாவுக்கு 122.6 மில்லியன்
வாஷிங்டன்:
இந்தியாவுக்கு 122.6 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க, வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்க முடிவு அமெரிக்கா செய்துள்ளது.
இதற்கான பரிந்துரையை அதிபர் புஷ்ஷின் அரசு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வழங்கியுள்ளது.
2006ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த மாதம் 7ம் தேதி அதிபர் புஷ் நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு முன் வைத்தார். 427 பில்லியன்டாலர் பற்றாக்குறையுடன் கூடிய 2.5 டிரில்லியன் டாலர் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவுபெரிய பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
இதனை அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக் குழு பரிசீலித்து வருகிறது.
இதில் இந்தியாவுக்கு 122.60 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 48.8 மில்லியன் டாலர்கள் குழந்தைகள் நலத்திட்டங்களுக்கும், 29.60 மில்லியன் டாலர் வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
14 மில்லியன் டாலர் பொருளாதார உதவித் திட்ட நிதியாகவும், 1.20 மில்லியன் டாலர் ராணுவப் பயிற்சி மற்றும் கல்வித் திட்டத்துக்கும்ஒதுக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு, தீவிரவாத எதிர்ப்பு, கண்ணி வெடிகள் அகற்றல், எல்லைப் பகுதி பாதுகாப்பு ஆகிய பணிகளுக்கு 0.6மில்லியன் டாலர்களும், அவசர கால நிதி உதவி மற்றும் உணவுத் திட்ட உதவியாக 28.40 மில்லியன் டாலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிளின்டனுக்கு இருதய சிகிச்சை:
இதற்கிடையே முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு இரண்டாவது இருதய சிகிச்சை செய்யப்படவுள்ளது. கடந்த அக்டோபரில் அவருக்குபை-பாஸ் அறுவை சிகிச்சை நடந்தது.
இப்போது இடது புற மார்பில் தேங்கியுள்ள திரவத்தை நீக்கவும் காயத்துடன் கூடிய சில திசுக்களை அகற்றவும் சிறிய அறுவை சிகிச்சைமேற்கொள்ளப்படவுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications