சொத்து குவிப்பு வழக்கு: ஜெ வருகிறார்- பெங்களூர் நீதிமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா, அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா, அவரது உறவினர்கள் தினகரன், சுதாகரன், இளவரசி ஆகியோர்வருமானத்தை மீறி சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 14ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில்தொடங்குகிறது.
அன்றைய தினம் ஜெயலலிதா உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இதையடுத்து இந்த சிறப்பு நீதிமன்றம்அமைந்துள்ள சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தை பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் மரிசாமி பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ரூ. 66.6 கோடியளவுக்கு சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பான வைர, தங்க,வெள்ளி நகைகள், சொகுசு பஸ் ஆகியவை ஏற்கனவே பெங்களூர் கொண்டு வரப்பட்டுவிட்டன.
பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட தமிழ் ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டன.
வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியாக பச்சேபுரா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் தரப்பில் ஜெயலலிதாவுக்கு எதிராகவாதாட மூத்த வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
காவிரி விவகாரத்தால் பெங்களூரில் தனக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்று ஜெயலலிதா கூறியுள்ளதால், அவருக்கு சிறப்புபாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
விசாரணை நடக்கவுள்ள 37வது கோர்ட் ஹால் அமைந்துள்ள கட்டடத்துக்கு ஜெயலலிதா வந்து செல்ல தனி வாசல்அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வந்து போகும்போது நீதிமன்றத்துக்குள் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும் நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகளை நிறுத்திவிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
14ம் தேதி நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும். ஆனால், அன்றைய தினம் தனது கட்டுப்பாட்டில் உள்ளகாவல்துறையின் மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேச வேண்டும்.
இதையே காரணமாக வைத்து நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதா விலக்கு கோருவார் என்று தெரிகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications