கங்குலியை நீக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை :
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து செளரவ் கங்குலியை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கைத் தொடுத்த வழக்கறிஞருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பழனிச்சாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,இந்திய கிக்கெட் அணியின் கேப்டனாக செயல்படும் கங்குலி தொடர்ந்து தோல்விகளையேக் கொடுத்து வருகிறார்.
எனவே அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். மேலும், டெஸ்ட் போட்டிகளுக்கு ராகுல் டிராவிட்டையும், ஒரு நாள்போட்டிகளுக்கு வீரேந்திர ஷேவாக்கையும் கேப்டனாக நியமிக்க வேண்டும் எனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள்,இந்திய அரசியல் சாசனச் சட்டப்படி இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. எனவே இது தள்ளுபடி செய்யப்படுகிறது.
பொது நல மனுவை தவறான முறையில் பயன்படுத்தி, விளம்பரம் தேட முயன்ற வழக்கறிஞர் பழனிச்சாமிக்கு ரூ. 10,000அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை வழக்கறிஞர் சங்க நிதியில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications