சென்னை கடற்கரைக்கு வந்த டால்பின்கள்
சென்னை:
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கம் கடலில் டால்பின்கள் கூட்டமாக வந்ததால் அப்பகுதி மக்கள் வியப்படைந்து கூட்டம் கூட்டமாகசென்று அவற்றை வேடிக்கை பார்த்தனர்.
சென்னை கடல் பகுதியில் டால்பின்கள் வருவது அரிதான விஷயம், அதிலும் கூட்டம் கூட்டமாக டால்பின்கள் இதுவரைவந்ததில்லை. இந் நிலையில் சென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் கடல்பகுதியில் டால்பின்கள் கூட்டமாக வந்ததால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
40 டால்பின்கள் வரை ஈஞ்சம்பாக்கம் கடல் பகுதிக்கு வந்தன. கரைக்கு வந்த அவை விளையாடின. இவற்றைப் பார்த்த அப்பகுதிமக்கள், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கடல் ஆணை பாதுகாவலர்கள் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்குத் தகவல்கொடுத்தனர்.
இதையடுத்து கடல் ஆமை பாதுகாவலர்கள் அமைப்பினர் விரைந்து சென்று டால்பின்களை கடலுக்குள் அனுப்ப நடவடிக்கைஎடுத்தனர். கொட்டிவாக்கம் கடல் பகுதி வரை அவர்கள், டால்பின்களை கடலுக்குள் அனுப்பினர். பின்னர் அந்த டால்பின்கள்கடலுக்குள் சென்று விட்டன.
இந்த டால்பின்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அழகான கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில்இந்த டால்பின்கள் இருந்தன. 6 முதல் 7 அடி வரை நீளமுடையதாக இருந்தன. ஒரு குட்டி டால்பினும் இக்கூட்டத்தில் இருந்ததாகஅவற்றைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விளையாடிக் கொண்டும், கடல் நீரில் டைவ் அடித்தவாறும் அவை காணப்பட்டதை அப்பகுதி மக்கள் கூட்டமாக நின்றுவேடிக்கை பார்த்தனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications