திமுக, அதிமுக மெளனம்- பாஜக கோபம்
ராஞ்சி & சென்னை:
ஜார்க்கண்டில் புதிதாய் பதவியேற்றுள்ள பா.ஜ.க. முதல்வர் அர்ஜூன் முண்டா வரும் 15ம் தேதியே சட்டசபையில்பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆளுநர் உதவியோடு போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாமலேயே முதல்வர் பதவியில் அமர்ந்த ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா தலைவர் சிபு சோரன், வேறு வழியின்றி பதவியை விட்டு விலகினார்.
அவரை முதல்வராக்க உதவி செய்த காங்கிரஸ் மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந் நிலையில் தனக்கு ஆதரவளித்த 5 சுயேச்சைகளுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கி முதல்வராகப் பதவியேற்ற முண்டா, 15ம்தேதியே பெரும்பான்மையை நிரூபிப்பதாக அறிவித்துள்ளார். மெஜாரிட்டியை நிரூபிக்க அவருக்கு 21ம் தேதி வரை காலஅவகாசம் உள்ளது. ஆனாலும் முன் கூட்டியே நம்பிக்கை வாக்கு வெற அவர் முடிவு செய்துள்ளார்.
திமுக-அதிமுக மெளனம்: பாஜக கோபம்
இதற்கிடையே இன்று சென்னை வந்த பாஜக முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு நிருபர்களிடம் பேசுகையில்,
ஆளுநர்கள் மத்திய ஆளும் கட்சியின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் காங்கிரஸ் தான்.டெல்லியில் திரைக்கதை வசனம் எழுதப்பட்டு ஜார்க்கண்ட்டில் நாடகத்தை அரங்கேற்றினார்கள்.
இதில் தனக்கு சம்பந்தமில்லை என்று காங்கிரஸ் தலைமை தப்ப முயல்வதை ஏற்க முடியாது. கோவாவிலும் ஜார்க்கண்டிலும்ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது காங்கிரஸ். இந்தப் பாவத்தை எங்கு போனாலும் தொலைக்க முடியாது.
கோவா, ஜார்க்கண்டில் இவ்வளவு நடந்திருக்கிறதே. ஆனால், திமுக வாய்மூடி மெளனமாக இருப்பது ஏன்? அதிமுகவும்மெளனமாய் இருப்பது ஏன்? வியப்பாக இருக்கிறதே என்றார் நாயுடு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications