துருக்கி, அந்தமானில் நிலடுக்கம்: குமரி, தூத்துக்குடியில் கடல் கொந்தளிப்பு
ஜகார்தா:
இந்தோனேஷியா, அந்தமான், துருக்கி, ஈரானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவின் அருகிலும், லிட்டில் அந்தமான் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான், ஈரான்,துருக்கியில் இன்றும் சுலவேசியில் நேற்றும் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. சுலவேசி, அந்தமான் நிலநடுக்கம் ரிக்டர்அளவுகோளில் இது 5.5 என்ற அளவுக்குப் பதிவானது.
துருக்கியிலும் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல மாடிக் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழக்கவில்லை.இன்று காலை 9.30 அளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர்கோளில் 5.7 என்ற அளவுக்கு பதிவானது.
அதே போல ஈரானில் 5.9 என்ற நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந் நிலையில் தமிழகத்தின் குமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டக் கடற்கரைகளில் அலைகளின் வேகம் மிக பயங்கரமாகஉள்ளது.
இந்த அலைகளுக்கு அந்தமான், இந்தோனேஷிய நிலநடுக்கங்கள் காரணமாக இருக்கலாம் என அச்சம் பரவியுள்ளது. ஆனால்அமாவசையின்போது வழக்கமாகத் தோன்றும் ராட்சத அலைகள் தான் இவை என மீனவர்கள் கூறுகின்றனர்.
நெல்லையில் பெருமணல் பகுதியில் ராட்சத அலைகளால் கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தூக்கி வீசப்பட்டன. அனுமன்ஆற்றுப் பகுதியில் கடல் நீர் புகுந்தது. இதனால் ஆற்றை ஒட்டிய வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சில வீடுகளின் சுவர்கள்சேதமடைந்தன.
நேற்று நள்ளிரவிலும் அலைகள் அதிகமாக இருந்ததால் இப் பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். தூத்துக்குடி மாவட்டம்திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் செந்தில் வீதி மற்றும் சவேரியார் தெரு ஆகியவற்றில் கடல் நீர் புகுந்தது.
குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம் என்ற இடத்தில் கடலையொட்டிய தென்னந்தோப்புகளுக்குள் நீர் புகுந்துள்ளது.தூத்துகுடியில் மணப்பாடு, உவரி ஆகிய பகுதிகளிலும் ராட்சத அலைகள் வீசுகின்றன.
குமரி விவேகானந்தர் பாறையை மிக உயரமான, வேகமான அலைகள் தாக்கியதால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடனேயே அங்குபொழுதைக் கழித்தனர்.












Click it and Unblock the Notifications