ஒருநாள் போட்டி: கொச்சி வருகிறார் முஷாரப்
கொச்சி:
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைக் காணபாகிஸ்தான் அதிபர் முஷாரப் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது.மொகாலியில் கடந்த 8ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றிமுடிவடைந்துள்ளது.
2வது டெஸ்ட் போட்டி 16ம் தேதி கொல்கத்தாவிலும், 3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பெங்களூரிலும்தொடங்குகிறது.
இதன்பிறகு ஒரு நாள் போட்டிகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 2ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் முதல் ஒரு நாள்போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று கிரிக்கெட் போட்டியைக் காண இந்தியா வரபாகிஸ்தான் அதிபர் முஷாரப் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர், கொச்சியில் நடைபெறவுள்ள முதல் ஒரு நாள்போட்டியைக் காணவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று கொச்சியிலுள்ள கலூர் ஜவகர்லால் நேருஸ்டேடியத்திற்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆய்வு நடத்திவிட்டுச் சென்றனர்.
இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் எஸ்.கே. நாயர் கொச்சியில் இன்று உறுதிப்படுத்தினார். அவர்கூறுகையில், மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று கொச்சி ஸ்டேடியத்திற்கு வந்து பார்வையிட்டுச்சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் அதிபர் முஷாரப் வருவது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்காக அவர்கள்வந்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications