ஜெயலலிதா நிதானமிழந்துவிட்டார்: வைகோ
மதுரை:
போலீஸ் அதிகாரியுடன் ஸ்டாலின் வாக்குவாதம் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று வைகோ கூறினார்.
மதுரை மாநகர் மாவட்ட மதிமுக ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த வைகோ,நிருபர்களிடம் கூறுகையில், வருகிற மே 1ம் தேதி திருப்பூரில் மறுமலர்ச்சி தொழிலாளர் மாநாடு நடக்கிறது. இதில்மத்திய தொழிலாளர் நல அமைச்சர் கலந்து கொள்கிறார்.
மதிமுக சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு தொண்டுள்ளத்தோடுஇந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய, மாநில பட்ஜெட்டுகளில் மருத்துவ திட்டங்களுக்கு அதிக நிதிஒதுக்க வேண்டும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கவர்னர் எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பான்மை பலமில்லாத சிபுசோரனை அவர் ஆட்சியமைக்க அழைத்திருக்க கூடாது. இதனால் இந்தப் பிரச்சினையில் கவர்னர் தலையிடவேண்டிய நிலை ஏற்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டதும் அதன் எல்லையை மீறியசெயலாகும்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் ஏழை மக்கள்உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
தமிழக சட்டசபையில் ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் ஆளும் கட்சியினரால் புறக்கணிக்கப்படுகிறது.110வது விதியை முதல்வர் தவறாகப் பயன்படுத்துகிறார். சபையில் இல்லாத தலைவர்கள் மீது அவர் கடுமையாகவிமர்சனம் செய்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவர் நிதானம் இழந்துபேசுகிறார்.
மு.க.ஸ்டாலின், போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் எந்தத் தவறும் இல்லை. அவர் மீது தவறாக குற்றம்சாட்டுகிறார்கள்.
திமுக கூட்டணியில் விரிசல் வருமா என்று சிலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குஏமாற்றமே மிஞ்சும். இதே கூட்டணி சட்டசபை தேர்தலுக்கும் தொடரும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு இன்னும் இருக்கிறது. எனவேஅடுத்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி முதல்வராவார்.
-
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications