இன்னும் தொடர்கிறது இரட்டை டம்ளர் முறை!: ஜாதி வெறிக்கு துணை போகும் போலீஸ்!!
சென்னை:
சேலம் மாவட்டத்தில் இரட்டை டம்பளர் முறை நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் திருமலைகிரி என்ற ஊரைச் சேர்ந்த டி.செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில்,
திருமலைகிரி பஸ் நிறுத்தத்தில் உள்ள கடைகளில் இரட்டை டம்பளர் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதை எனது மகன்(மைனர்) தட்டிக் கேட்டுள்ளான். இதையடுத்து அவனை உயர் ஜாதியை சேர்ந்து இந்துக்கள் அடித்துள்ளனர்.
காயமடைந்த அவனை மருத்துவமனையில் அனுமதித்தோம். இந் நிலையில் எனது மகன் மீது, அவனைத் தாக்கியவர்கள்போலீஸில் பொய்ப் புகார் கொடுத்தனர். அதன் பேரில், அவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதன் மூலம் சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் 7வது பிரிவை காவல்துறை மீறியுள்ளது. மேலும் ஜாதி வெறி காரணமாகவேகாவல்துறை அதிகாரிகள் எனது மகன் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
எனவே தவறு செய்த அதிகாரிகள் மீது உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இரட்டை டம்பளர்முறையை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.டி.சிவசுப்ரமணியம், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, தமிழக அரசுக்கு ஒருவாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினார்.












Click it and Unblock the Notifications