விஏஓக்களின் பல கோடி சுனாமி ஊழல்: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சுனாமி நிவாரணப் பணிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு நாகை மாவட்ட ஊழல் தடுப்பப் பிரிவுபோலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டோர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. அதில்,
எங்கள் மாவட்டதிதல் சுனாமி நிவாரணப் பணிகளில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளன. கிராம நிர்வாக அலுவலர்கள்(வி.ஏ.ஓக்கள்) செய்துள்ள முறைகேடுகள் குறித்து அரசு மெளனமாக உள்ளது.
சுனாமிக்கு முன்பே இறந்தவர்களையும், சுனாமியால் இறந்தவர்களாகக் கணக்கு காட்டி பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுநடந்துள்ளது.
இதுதொடர்பாக நாகை ஊழல் தடுப்பப் பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தும் பலனில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சிங்கராவேலு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,முறைகேடு குறித்து இதுவரை யாரிடமிருந்தும் புகார் வரவில்லை என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி, புதிதாக புகார் கொடுக்குமாறு நலச் சங்கத்திற்கு உத்தரவிட்டார். அந்தப் புகாரை பதிவு செய்து விசாரணைநடத்துமாறு ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் அவர் ஆணையிட்டார்.
கீழ்மட்ட அளவில் மகா ஊழல் பேர்வழிகள் இந்த கிராம நிர்வாக அலுவலர்கள். புதிய ரேசன் கார்டுக்கு பதிவு செய்வதில் இருந்துஜாதிச் சான்றிதள் வாங்குவது வரை இவர்களது உதவியில்லாமல் எந்த வேலையும் நடக்காது.
இந்தப் பணிகளைச் செய்ய மக்களை அட்டையாய் உறிஞ்சுவதில் வல்லவர்கள் இந்த வி.ஏ.ஓக்கள். இவர்களில் சில நல்லஆத்மாக்களும் இருப்பதையும் மறுக்கமுடியாது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications