மனைவி வர மறுப்பு: மனித வெடிகுண்டாக மாறி கணவர் தற்கொலை !!
மூணாறு:
மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்ததால், உடலில் வெடிகுண்டைக் கட்டிக் கொண்டு அதை வெடிக்கச் செய்துபலியானார் கணவர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் குமார். இவர் தொடுபுழா என்ற இடத்தில் கருங்கல் பாலிஷ் செய்யும் தொழில்செய்து வந்தார்.
இவரது மனைவி ஜோதி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகேயுள்ள ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்தவர்.இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜோதி கோபித்துக் கொண்டு ராஜாக்காடு சென்றுவிட்டார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்த குமார் அங்கு சென்று பேசியுள்ளார். வீட்டுக்கு வருமாறு ஜோதியிடம்கேட்டுள்ளார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த குமார் திரும்பி வந்துவிட்டார். சில நாட்களில் மீண்டும் மனைவியிடம் சென்றார். ஜோதியை தன்னுடன்வருமாறு மீண்டும் அழைத்துள்ளார். ஆனால் ஜோதி வர மறுத்துள்ளார்.
இதையடுத்து, நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், என்னுடன் வந்து விடு என்று மிரட்டியுள்ளார். அப்போதும் ஜோதிகண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து சட்டையைக் கழற்றிய குமார், தனது உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டுக்கு குமார் தீ வைத்துள்ளார். இந்தவெடிகுண்டு வெடித்ததில் உடல் சிதறி குமார் பரிதாபமாக இறந்தார்.
கருங்கல் உடைக்க பயன்படும் நாட்டு வெடிகுண்டை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது. இச் சம்பவம் மூணாறு பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications